வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக ஏமாற்றி காசை சுருட்டிகொண்டோடிய நபர்!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக கூறி 15ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களிடம் காசை சேகரித்த நபர் இறைச்சியினை வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.

குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளிற்கு சென்ற அவர் மரை இறைச்சி தன்னிடம் உள்ளதாகவும் ஒருகிலோ 800 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பலர் குறித்த நபரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தினை வழங்கியுள்ளனர்.

எனினும் நீண்ட நாளாகியும் பணத்தினை வழங்கியவர்களிற்கு இறைச்சியும் வழங்கப்படவில்லை, பணத்தினையும் கொடுக்கவில்லை. குறித்த நபர் தம்மை ஏமாற்றியுள்ளதை பின்னரே உணர்ந்தனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்குமாறு நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

Previous articleசெம்பருத்தி சீரியல் நடிகையை வீடியோ எடுத்து மிரட்டிய உதவி இயக்குணர் – அடுத்த சித்ரா நான்தான் என கதறும் நடிகை
Next articleபாடசாலைகளை உடனடியாக மூடுமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை!