பாடசாலைகளை உடனடியாக மூடுமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதாவது கொரோனா அச்சத்தின் காரணமாகவே பாடசாலைகளை மூடுவதற்கு அவர்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகச் சந்திப்பில் பேசிய சங்கத்தின் செயலாளர் பியசிரி பெர்னாண்டோ, பாடசாலைககளை மூடாமல் விட்டால் தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைக்கு வழிவகுக்குமென்று கூறினார்.
மேலும் புத்தாண்டு காலத்தில் நடந்த பல கலாச்சார விழாக்கள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வழிவகுத்தள்ளன.பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பொறுப்பான முறையில் பின்பற்றத் தவறிவிட்டனர்.
அத்தோடு மருத்துவமனை வளங்களின் பற்றாக்குறை காரணமாக மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் தயங்கக்கூடுமென்று பியாசிரி பெர்னாண்டோ கூறினார்
மேலும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடசாலைகள் மீண்டும் இயங்க தொடங்கினாலும், மாணவர் வருகை குறைவாக காணப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.