லிபிய மத்தியதரைக் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 100 க்கும் மேற்பட்ட ஐரோப்பிய குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சுயாதீன மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 130 பேரை ஏற்றிச் சென்ற இறப்பர் கப்பலின் சிதைவுகள் லிபிய தலைநகர் திரிப்போலிக்கு வடகிழக்கின் மத்தியதரைக் கடலில் காணப்பட்டதாக ‘ஓஷன் வைக்கிங்’ என்ற மீட்பு கப்பலை இயக்கும் அதிகாரிகள் அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் காரணமாக உயிர் பிழைத்தவர்களை மீட்பு கப்பலால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், எனினும் பத்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நீண்டகால சர்வாதிகாரி மொயமார் கடாபியை வெளியேற்றி கொன்ற 2011 நேட்டோ ஆதரவு எழுச்சியின் பல ஆண்டுகளில், போரினால் பாதிக்கப்பட்ட லிபியாவுக்கு ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் போர் மற்றும் வறுமை காரணமாக நாட்டைவிட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கான முக்கிய போக்குவரத்து புள்ளியாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறான குடியேற்றம் காரணமாக இந்த ஆண்டு இதுவரை 350 க்கும் மேற்பட்டோர் கடலில் உயிரிழந்துள்ளனர். எனினும் சமீபத்திய கப்பல் விபத்தில் பலியானவர்களை கணக்கிடவில்லை என ஐரோப்பிய மனிதாபிமான அமைப்பு மேலும் கூறியுள்ளது.