பிரித்தானியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 95ஆயிரத்து 703பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 327பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஆயிரத்து 642பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 41இலட்சத்து 66ஆயிரத்து 734பேர் பூரண குணமடைந்துள்ளனர்

Previous articleலிபிய மத்தியதரைக் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம்?
Next articleதொற்றுக்கு உள்ளானவர்களில் 94 ஆயிரம் பேர் பூரண குணம்!