தொற்றுக்கு உள்ளானவர்களில் 94 ஆயிரம் பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 151 பேர் இன்று (23) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,036 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரையில் 98,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 634 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரித்தானியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு!
Next articleநான் செய்த ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்!