நான் செய்த ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்!

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் பதவியைத் துறப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக 12 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை சூப்பர் மார்க்கெற் மற்றும் சதொச உள்ளிட்ட விற்பனை நிலையங்களுக்கு வழங்கியிருந்தோம்.

குறித்த பொதிகளில் தரமான பொருட்கள் காணப்படவில்லை எனவும் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சலுகைப் பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக கண்டறியப்பட்டால் அக்கணமே பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.

உண்மையாக நாம் எவரையும் கைது செய்யுமாறு கூறவில்லை. அர்ப்பணிப்புடனேயே சேவை செய்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleதொற்றுக்கு உள்ளானவர்களில் 94 ஆயிரம் பேர் பூரண குணம்!
Next articleயாழில் சற்றுமுன் மேலும் 12 பேருக்கு கொரோனா!