இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லேடிசிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் டாக்டர் எஸ். விஜேசூரிய இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக தொற்று பரவுவது அதிகரித்துள்ள நிலையில் அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை தற்போதிருந்தே முன்னெடுக்க திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.