இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களை கொரோனா தாக்கி வரும் நிலையில். ஒரு நாளைக்கு மட்டும் 2,500 பேர் வரை இறக்க ஆரம்பித்துள்ளார்கள். ஏற்க்கனவே 1 லட்சத்தி 87,000 ஆயிரம் பேர் இறந்துள்ள நிலையில். இன்னும் சில தினங்களில் அது 2 லட்சமாக மாறும் நிலை உள்ளது. ஆனால்…
இந்த நிலையில் கூட, லாக் டவுன் தேவை இல்லை என்று தமிழ் நாடு முதலமைச்சர் சொல்வதும். டெல்லி அரசும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளது என்பது பெரும் அதிர்ச்சியான விடையம். இந்திய மத்திய அரசு லாக் டவுனை அறிவிக்கவில்லை என்றால் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கவேண்டிய நிலை ஏற்படும். தடுப்பூசிகள் தற்போது கள்ளச் சந்தையில் விற்பனையாகி வருகிறது. ஒரு தடுப்பூசி 35,000 ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபா வரை செல்கிறது என்பது, வேதனையான விடையம்.