மின் கம்பியில் சிக்க வைத்து பசுவைக் கொன்றவரை அடித்து கொன்ற கொடூரம்!

மின் கம்பியில் சிக்க வைத்து பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் பிணையில் வீடு திரும்பியிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஊரகஸ்மங்கஸ் சந்தி, கலுவலகொட பகுதியில் நேற்றிரவு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று (23) உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

62 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

பலியானவர் பசுவின் உரிமையாளரின் மகனால் குத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது

Previous articleஇன்றைய இராசிபலன்கள் (24.04.2021)
Next articleயாழில் மேலும் அதிகரித்தது கொரோனா!