யாழில் மேலும் அதிகரித்தது கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும்12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என்பவற்றில் 636 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் 12 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி – யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைதடி அரச திணைக்களம் ஒன்றின் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவர் நேற்று தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் திருநெல்வேலி பாரதிபுரம் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Previous articleமின் கம்பியில் சிக்க வைத்து பசுவைக் கொன்றவரை அடித்து கொன்ற கொடூரம்!
Next articleமூன்று மாவட்டங்கள் கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனம்!