நேற்றய தினம் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி குருநாகலில் 251 பேருக்கும் கம்பஹாவில் 236 பேருக்கும் கொழும்பில் 194 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை களுத்துறையில் 48 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 38 பேருக்கும் காலியில் 36 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஹம்பாந்தோட்டையில் 28 பேரும் மாத்தறையில் 26 பேரும் அநுராதபுரத்தில் 23 பேரும் மாத்தளையில் 21 பேரும் வவுனியாவில் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டியில் 11 பேருக்கும் மொனராகலையில் 10 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 09 பேருக்கும் திருகோணமலையில் 08 பேருக்கும் புத்தளத்தில் 07 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Previous articleமூன்று மாவட்டங்கள் கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனம்!
Next articleரிஷாட் பதியூதீனும் அவரது சகோதரரும் கைது!