ரிஷாட் பதியூதீனும் அவரது சகோதரரும் கைது!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (சனிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதோடு , ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ரிஷாட் பதியூதின், கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்தும், அவரது சகோதரரான ரியாஜ் பதியூதின், கொழும்பு வௌ்ளவத்தையில் வைத்தும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார்.

Previous articleநேற்றய தினம் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Next articleமீண்டும் அமுலுக்கு வரவுள்ள வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை!