ஒட்டுசுட்டானில் கைதானவருக்கு கொரோனா தொற்று!

குற்றச்செயல்களில் ஈடுபட்டர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பிடியாணை உத்தரவுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச் சேர்ந்தவருக்கே கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது. அவர், கடந்த 19ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு 20ஆம் திகதியன்று பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் அறிக்கை, 23ஆம் திகதியன்று வெளியானது. அதன்பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.

சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், பொலிஸாருடன் தொடர்புடையவர், நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பினருடன் தொடர்பிலிருந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு இன்று (24) பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Previous articleமீண்டும் அமுலுக்கு வரவுள்ள வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை!
Next articleசிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் தடை!