சிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் தடை!

சிறைக் கைதிகளை பார்வையிட இன்று (24) முதல் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் அதிகரிப்புக் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதை குறைக்கும் நோக்கில் கைதிகளை பார்வையிட தடை விதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

எனினும், சிறைச்சாலை சிற்றுண்டிச் சாலையில் உணவுப்பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Previous articleஒட்டுசுட்டானில் கைதானவருக்கு கொரோனா தொற்று!
Next articleவடக்கில் வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்ய 7,500 மில்லியன் ரூபாவை விடுவியுங்கள்!