வடக்கில் வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்ய 7,500 மில்லியன் ரூபாவை விடுவியுங்கள்!

கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு
வடக்கு மாகாணத்திற்கு மட்டும் 7512.814 மில்லியன் ரூபா நிதி
தேவைப்படுகிறது. எனவே இந் நிதியினை படிப்படியாக விடுவித்து மக்களை
நெருக்கடிக்குள் இருந்து மீட்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் மு.சந்திரகுமார் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை
எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த காலத்தில் தேசிய வீடமைப்பு
அபிவிருத்தி அதிகார சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான பணம் முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் என சில கட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில் மிகுதிப் பணம் வழங்கப்படவில்லை. இதனால் வீட்டுத் திட்டப் பயனாளிகளான பொது மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

வீட்டுத்திட்டங்கள் மூலம் வீடுகளை பெற்றவர்கள் அதனை பூர்த்தி செய்ய
முடியாது அரைகுறையான கட்டுமானங்களுடன் உள்ளனர். இவர்களின் நிலைமையும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. அவர்கள் தற்போது வாழ்கின்ற தற்காலிக வீடுகள் மிகவும் மோசனமான நிலையில் காணப்படுகிறது.

எனவே மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக வீட்டுத்திட்ட நிதியை விடுவித்து மக்களை நெருக்கடிக்குள் இருந்து மீட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு1189.330 மில்லியனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 1912.747 மில்லியனும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1592.27 மில்லியனும், மன்னார் மாவட்டத்திற்கு 1573.348 மில்லியனும், வவுனியா மாவட்டத்திற்கு 1245.362 மில்லியனுமாக மொத்தம் 7512.814 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. எனவும் அவர் தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleசிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் தடை!
Next articleகிளிநொச்சியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பீதியில் மக்கள்!