திருடிய கொரோனா தடுப்பூசிகளை நேரில் வந்து மன்னிப்பு கேட்டு திரும்பியளித்த திருடன்!

திருடிய கொரோனா தடுப்பூசிகளை திருடன் திரும்ப கொண்டு வந்த வைத்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது. தடுப்பூசி என தெரியாமல் திருடி விட்டதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறுகின்றது. அந்த வகையில், ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் 1,270 டோஸ் கோவிஷீல்டு மற்றும் 440 டோஸ் கோவாக்சின் மருந்துகள் திருட்டுப் போனது.

சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தடுப்பூசிகளை களவாடிய நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மருத்துவமமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தடுப்பூசியை திருடிய நபர் அதைக் கொண்டு வந்து வைத்து காவல்நிலையம் அருகே வைத்து விட்டுச் சென்றிருக்கிறார். அங்கிருக்கும் டீக்கடை ஒன்றில் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அதில் முழுக்க, கொரோனா தடுப்பூசி மருந்துகள் இருந்துள்ளன.

அந்த பைக்கு உள்ளே, தடுப்பூசி என தெரியாமல் திருடிவிட்டேன். மன்னித்துவிடுங்கள் என எழுதப்பட்ட துண்டுச் சீட்டு ஒன்று இருந்துள்ளது. இது அங்கிருந்தோரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, மரண ஓலங்கள் என இந்தியாவே திணறிக் கொண்டிருக்கும் சூழலில் மக்கள் மத்தியில் அவ்வப்போது வெளிப்படும் மனிதத்துவம் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleகிளிநொச்சியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பீதியில் மக்கள்!
Next articleநாங்கள் நிதிக்காகவே போராடுகிறோமென கூறி எமது தியாகங்களை கொச்சைப்படுத்திறார்கள்!