யாழ்.பருத்துறை பகுதியில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபத்தான ஆயுதங்கள் மீட்பு!

யாழ்.பருத்துறை – பொலிகண்டி பகுதியில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பெருமளவு ஆயுதங்கள் இராணுவத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குறித்த ஆயுதங்கள் பிளாஸ்டிக் பரலில் போட்டு பாதுகாப்பாக மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பலாலி இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் இன்று மாலை குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்பாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் பாடசாலை ஒன்றில் “குட்மோர்ணிங்” சொல்லவில்லை என்பதால் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்!
Next articleஒவ்வாமை காரணமாக வைத்தியம் பார்ப்பதற்கு சென்ற பெண் ரோட்டில் ஒருவர் கதறி ஒடிய அவலம்!