இலங்கையில் கஞ்சா பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும் – டயனா கமகே

இலங்கைக்குள் இரவு நேர வாழ்க்கை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், அப்படி ஏற்படுத்தவில்லை என்றால், எதற்காக வெள்ளைகாரர்கள் இலங்கைக்கு வருகிறார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கேள்வியெழுப்பியுள்ளார்.

இணையத்தள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் இப்படியான கலாச்சாரத்தை ஏற்படுத்துவதில் சமயமும், கலாச்சாரமுமே தடையாக உள்ளன.

இலங்கையை தாய்லாந்து போல் மாற்ற வேண்டும். தாய்லாந்து பௌத்த நாடாக இருந்த போதிலும் அங்கு பாலியல் தொழில் சட்டரீதியானது.

நாட்டில் உள்ள பெரிய முக்கியஸ்தர்கள் பாலியல் தொழிலாளிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

எதிர்காலத்தில் பாலியல் தொழில் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

சாராய தவரணைகள் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதிகளை நீண்ட நேரம் திறந்து வைக்க வேண்டும்.

கஞ்சா பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும் எனவும் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.

Previous articleவவுனியாவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் அதிரடியாக சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!
Next articleபெண் தர மறுத்ததால் காதலியின் தந்தையை கொடூரமாக கொன்ற காதலன்!