பெண் தர மறுத்ததால் காதலியின் தந்தையை கொடூரமாக கொன்ற காதலன்!

தமிழகத்தில் பெண் தர மறுத்ததால் ஒருதலையாக காதலித்து வந்த நபர், அப்பெண்ணின் தந்தையை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழங்குடா சுனாமி நகர் பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65), மீனவர்.

இவருக்கு 2 மனைவிகள், இருவரும் இறந்து விட்டனர், 2வது மனைவியின் மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து வரன் பார்க்கத் தொடங்கினார்.

நல்ல மணமகன் அமைந்த நிலையில், நிச்சயதார்த்த ஏற்பாடுகளை சுப்பிரமணியன் செய்து வந்தார்.

இதற்காக தன்னுடைய மூத்த மகளின் வீட்டுக்கு சென்று 10 ஆயிரத்தை வாங்கி வந்துள்ளார், ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்ததால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இந்நிலையில், காலை தாழங்குடா கண்டக்காடு சாலையில் சுப்பிரமணியன் பிணமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், மக்களிடம் வாங்கி வந்த ரூ.10 ஆயிரம் மாயமாகியுள்ளது.

உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இக்கொலை காதல் தகராறில் அரங்கேறியது தெரியவந்துள்ளது.

சூத்துக்குளம் பகுதியை சார்ந்த 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், சுப்பிரமணியன் மகளை கடந்த 5 வருடமாக வாலிபன் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், அவருக்கு மற்றொரு நபருடன் திருமண ஏற்பாடுகள் நடந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சுப்பிரமணியனின் மகளை பெண்கேட்டு ஒருதலையாக காதலித்த வாலிபர் பிரச்சனை செய்த நிலையில், அதற்கு சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்ததால் அவரை கொன்றது தெரியவந்தது.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇலங்கையில் கஞ்சா பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும் – டயனா கமகே
Next articleகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பிரபல நடிகை!