இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது!

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 202 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பிரபல நடிகை!
Next articleதமிழக்தில் சானிட்டைசரைக் குடித்து பலியான மூவர்!