அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்ட 30 வீரர்கள்!

மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் வீரர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , அந்த அணியை சேர்ந்த 30 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றபோது, ​​மாணவனிற்கு கையில் ஏற்பட்ட காயம் நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு சிகிச்சைக்கு முன்பாக பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் வீரர் ஒருவரின் சகோதரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசற்றுமுன் யாழில் பயங்கரம் – குடும்ப தகராறு காரணமாக 52 வயது நபரொருவர் அடித்து கொலை
Next articleஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் பலி; ஆபத்தில் 200 நோயாளிகள்! – டெல்லியில் அதிர்ச்சி!