வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 386 பேரின் மாதிரிகள் இன்று (சனிக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எட்டுப் பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் மூவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஏழு பேருக்கும் யாழ். போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்றுக் கண்டறியப்பட்ட மூவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்த இராணுவத்தினர் என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleரொறொன்ரோவில் வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரிப்பு!
Next articleகொரோனா தொற்றுக்கு மேலும் 4 ஆண்கள் பலி!