கொரோனா தொற்றுக்கு மேலும் 4 ஆண்கள் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும், ரத்கம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும், குளியாப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 04 பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் 880 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் 100,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94155 ஆகும்.

Previous articleவடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
Next articleராஜஸ்தானுக்கு 2 வது வெற்றி!