முல்லைத்தீவு வட்டுவாகலில் வெடித்த குண்டு – சர்பத் குடிக்கப் போன இருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பாலத்திற்கு அண்மித்த முள்ளிவாய்க்ககால் கிழக்கிற்கும் வட்டுவாகலுக்கும் இடைப்பட்ட பகுதியில் குண்டு என்று நம்பப்படும் பொருள் வெடித்தததில் இளைஞர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலத்திற்கு அண்மையாக இருந்த சர்பத் கடையில சர்பத் போடுமாறு கூறி கடைக்கு பின்புறம் சென்ற போது நிலத்தில் கிடந்த மர்ம வெடிபொருள் வெடித்ததால் இருவரும் படுகாயம் அடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்த இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் ஒரு தீவிர சிகிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

Previous articleயாழ்.பருத்தித்துறையில் ஆசிரியையை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிப்பர் சாரதி,CCTV காட்சி வெளியானதால் 3 நாட்களின் பின் பொலிஸார் நடவடிக்கை!
Next articleவவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் துாக்கி வீசப்பட்டு 9 வயது சிறுமி பலி!