வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் துாக்கி வீசப்பட்டு 9 வயது சிறுமி பலி!

வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, 9 வயது சிறுமி பலியான நிலையில் தாயார் உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா இரட்டைபெரியகுளம் பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி ஒருவர் சாவைடந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்…

இன்று காலை குறித்த சிறுமி தனது தாயுடன் சிதம்பரபுரம் வைத்தியசாலைக்கு சென்று மருந்துஎடுத்து விட்டு கல்குண்ணாமடுப் பகுதியில் உள்ள அவரது வீடுநோக்கி முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர்.

இதன்போது எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கிவீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளர்.

கல்குண்ணா மடுப்பகுதியை சேர்ந்த ஆகாசா ரசினி என்ற 9 வயது சிறுமியே சாவடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Previous articleமுல்லைத்தீவு வட்டுவாகலில் வெடித்த குண்டு – சர்பத் குடிக்கப் போன இருவர் காயம்
Next articleநான்கு நிமிடத்திற்கு ஒரு கொரோன இறப்பு,அவசரப் பணியில் இந்திய ராணுவம்!