யாழில் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்ட பிரபல பாடசாலை!

இன்று ஞாயிற்றுக்கிழமை, சுகாதாரப் பிரிவினரால் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த பாடசாலை, சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சனசமுக நிலையத்தின் விளையாட்டுப் போட்டி நேற்றையதினம் விமரிசையாக இடம்பெற்றதோடு பல நூற்றுக் கணக்கான மக்களும் அந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலை, விளையாட்டு மைதானம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Previous articleபம்பலபிட்டி இந்துக்கல்லுாரி மாணவன் தற்கொலை!
Next articleஇலங்கையில் திடீர் வீரியம் எடுக்கும் கொரோனாவால் அச்சத்தில் மக்கள்!