நடைபெற்று முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை சகோதர ஊடகமொன்றுக்கு இன்று தெரிவித்தார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான பணிகள் இறுதி கட்டத்தினை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான திகதிகளை மாற்றுவதற்கு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.