சற்றுமுன் யாழில் மேலும் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

இன்றைய தினம் 408 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்குமாக வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

Previous articleஇலங்கையில் திடீரென எகிறும் கொரோன தொற்று – சற்றுமுன் மேலும் 650 பேர் அடையாளம் காணப்பட்டனர்
Next articleநாட்டை முடக்குவது கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான வழியாக இருக்காது – தடுப்பூசியே இறுதி தீர்வாகும்