யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடையுமானால் மேலும் ஒரு வைத்தியசாலை அவசியம் என்ற அடிப்படையில் யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை தற்காலிக வைத்தியசாலையாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை தேவை ஏற்படும் பட்சத்தில்
உடனடியாக தற்காலிக கொரோனா மருத்துவமனையாக மாற்றியமைக்க முன் ஏற்பாடுகள் மேற்கொள்வதெனவும், உடனடியாக வசதிகளை வழங்ககூடியவாறான ஒழுங்குகளை செய்யவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.