இந்தியாவிலிருந்து யாழிற்கு போதைப் பொருள் கடத்திய பிரதான சூத்திரதாரியும் கூட்டாளிகளும் கைது!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளைக் கடத்தி வந்து விநியோகித்து வந்த பிரதான சந்தேக நபர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

24, 26, 34 மற்றும் 38 வயதுடைய குருநகரைச் சேர்ந்த இருவரும் நீர்வேலி, கோப்பாயைச் சேர்ந்த தலா ஒருவருமே கைது செய்யப்படனர்.

கடற்தொழிலாளிகளாக நால்வரிடமிருந்து கூலர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

Previous articleயாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை தற்காலிக கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்?
Next articleஈராக்கில் மருத்துவமனையில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்து 82 பேர் பலி!