யாழ் PHI மாருக்கும் பொலிசாருக்கும் ஏன் இந்த அசமந்தம்?

புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இலங்கை மக்களிடம் தனது கொண்டடாட்டததை ஆரம்பித்துள்ள கொரோனா தொற்றின் புதிய அலை நாட்டை மறுபடியும் கூறுபோட ஆரம்பித்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்துவதுற்காக அதிகளவான சட்டங்களும் நடைமுறைகளும் நாடுமுழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆனாலும் அந்தச் சட்டங்கள் அறிக்கைகளிலும் பத்திரிகைச் செய்திகளுக்குமானதாகவும் ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்கானதாகவும் இருக்காது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்பதே இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதுமட்டுமல்லாது இந்த சமத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டாலேயே கொரோனாவும் அடக்கப்படும் என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.

இதேநேரம் தற்போது கொரோனா தொற்று நாடுமுழுதும் மீண்டும் தனது அச்சுறுத்தலை தீவிரப்படுத்திவரும்; நிலையில் நாட்டின் அரச தலைவர்முதல் சுகாதார பகுதியினர் வரை நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துவருவதுடன் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றி வாழ்க்கை செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

ஆனால் அதே சுகாதார தரப்பினரும் அரச இயந்திரங்களை இயக்கும்; அதிகாரிகளும் பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதாக தெரியவில்லை.

குறிப்பாக ஆலயங்களிலும் திருமண நிகழ்வுகளிலும் ஒன்று கூடக்கூடாது என பொது சுகாதார தரப்பினரும் பொலிசாரும் பொதுமக்களை எச்சரித்துவரும்; நிலையில் வருமானம் ஈட்டும் மதுபான நிலையங்களிலும் இறைச்சி கடைகளிலும் சந்தைகளிலும் ஒன்று கூடி நிற்கும் மக்களை கட்டுப்படுத்துவதற்கு மனம் வராதது தான் ஏனோ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதைவிட சந்திக்கு சந்தி நின்று அப்பாவி மக்களை முகக்கவசம் அணியவில்லை என்று பிடித்து மிரட்டும் பொலிசாருக்கும் சிரட்டையில் தண்ணி நின்றால் கூட சுகாதார சீர்கேடு என கோட்டுக்கு எழுதும் பொது சுகாதார தரப்பினருக்கும் இவ்வாறான நடைமுறைகள் கண்ணுக்கும் தெரிவதாக இல்லை என யாழ்ப்பாணத்து சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சட்டம் அனைவருக்கும் சமமானது. இலங்கைத்தீவின் அரச தலைவரும்; அதை சமமாகவே பேணுகின்றார். அதை உறுதி செய்ய கடுமையான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றார். ஆனால் அதை நடைமுறைப்படுத்தி சாதித்துக்காட்ட சுகாதார தரப்பினரும் பொலிசாரும் தங்களை சீர்தூக்கிப் பாரக்கவேண்டும்.

Previous articleஈராக்கில் மருத்துவமனையில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்து 82 பேர் பலி!
Next articleஎதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!