கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம்; மூச்சு பயிற்சி செய்யுங்கள் – மன் கீ பாத்தில் மோடி அறிவுறுத்தல்

இந்தியா முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ள பிரதமர் மோடி கொரோனா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.

அதில் பேசிய பிரதமர் மோடி ”இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாம் அதை ஒன்றாக இணைந்து எதிர்த்து போராட வேண்டும். இந்தியாவில் மருத்துவ வசதிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்டவை உள்ளன, கொரோனாவிற்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். அது நுரையீரலை விரிவுப்படுத்தும். கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் வெளியாக போலி தகவல்களை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Previous articleஎதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
Next articleநிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக நடிகை கதறல்!