முகக்கவசமாக மாறிய பறவைக் கூடு!

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் என பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை வலியுறுத்தி வருகின்றன .

இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த முதியவர் ஒருவர் முகத்தை மறைக்க பறவைக் கூடு ஒன்றைப் பயன்படுத்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. தெலுங்கானாவின் மக்புப்நகர் மாவட்டத்தில் உள்ள சின்னமுனுகல் சாட் பகுதியைச் சேர்ந்த மேகலா குர்மய்யா என்பவர் தனக்கு சேர வேண்டிய ஓய்வூதிய தொகையை பெற அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி ஏற்ப்பட்டுள்ளது . இந்தியாவில் முகக்கவசம் அணியாவிட்டால் அரசு அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிப்பதில்லை .

ஆனால் முகக்கவசம் வாங்க போதிய பணம் இல்லாததாலும் ஆனாலும் ஓய்வூதிய தொகையை பெற அரசு அலுவலகத்திற்குள் போக வேண்டும் என்பதாலும் , பறவைக் கூட்டை முகக்கவசமாக மாற்றி அணிந்து கொள்ள முடிவு செய்திருக்கின்றார் மேகலா குர்மய்யா .

அவர் நெசவாளர் என்பதால், எளிதாக அதனை வடிவமைப்பு செய்து அணிந்து கொண்டார். வெள்ளை குர்தா, கைலியுடன், பறவை கூடு முகக்கவசம் அணிந்து அவர் கொடுத்த போஸ், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது .

Previous articleதடுப்பூசி திட்டத்தில் சாதனைப் படைத்த இந்தியா!
Next articleமலட்டுத் தன்மை, மாதவிடாய் வலிகளை போக்கும் அற்புத மூலிகை டீ… எப்படி தயாரிப்பது?