மலட்டுத் தன்மை, மாதவிடாய் வலிகளை போக்கும் அற்புத மூலிகை டீ… எப்படி தயாரிப்பது?

ரோஜாவில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை அதிக பலமுடன் வைத்து கொள்ளும்.

ரோஜாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. உடல் எடை குறைப்பு, மலட்டு தன்மை,செரிமான பிரச்சினை, மலச்சிக்கலை போன்றவற்றை குணப்படுத்துகின்றது.

அதுமட்டுமின்றி இது பெண்களுக்கு வரும் மாதவிடாய் வலியை போக்கும் சக்தியுடையது.

தற்போது இதனை ரோஜா இலைகளை வைத்து கொண்டு எப்படி மாதவிடாய் வலிகளை கட்டுப்படுத்தும் என்று பார்ப்போம்.

ரோஸ் டீ ஒரு அற்புத மூலிகையாக நமது உடலுக்கு செயல்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலிகள், மற்றும் மலட்டு தன்மை ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக உள்ளது.

தேவையானவை
  • கருப்பு மிளகு தூள் 1 ஸ்பூன்
  • தேன் 1 ஸ்பூன்
  • ரோஜா இதழ்கள் 1 கப்
செய்முறை

முதலில் தண்ணீரைகொதிக்க விட்டு, அதில் ரோஜா இதழை போடவும். 5 நிமிடம் கழித்து இதனை இறக்கி கொண்டு வடிகட்டி கொள்ளவும்.

இறுதியாக தேன் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து மாதவிடாய் காலங்களில் குடித்து வரலாம். மேலும், பெண்களின் மலட்டு தன்மை பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறதாம்.

Previous articleமுகக்கவசமாக மாறிய பறவைக் கூடு!
Next articleதிருகோணமலையில் கொரோனா 2 அவது அலை தீவிரம்!