மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றின் வைத்தியசாலையில் பணிபுரிந்த இளம் பெண் வைத்தியரின் உயிரிழப்பிற்கு மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பழனிநாதன் கீதாஞ்சலி எனும் இளம் பெண் வைத்தியர் மட்டக்களப்பு படுவான்கரையில் பின்தங்கிய தமிழ்கிராமங்களை உள்ளடக்கிய மகிழடித்தீவு வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் மக்களுடன் அன்போடு கனிவாக பழகி படுவான்கரை மக்களோடு இணைந்து சேவையாற்றியுள்ளார்.
திடீரென அவர் உயிரிழந்தமையினால் படுவாங்கன்கரையின் அனேக கிராம மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.