ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதி காதலி சமப்வஇடத்திலே பலி ,காதலன் கவலைக்கிடம்!

ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே காதலி மரணமடைந்துள்ளார். படுகாயமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவ்விருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளே, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மரணமடைந்த காதலி, தனியார் நிறுவ​னமொன்றில் காசாளராக கடமையாற்றுகின்றார். இவ்விருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு விபத்துக்குள் சிக்கியுள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற ரயில் கடவையில், சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்துள்ளது எனும், அந்த ரயில் கடவைக்கு, பாதுகாப்பான படலை இல்லையென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇராகலையில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து!
Next articleகிளிநொச்சி வைத்தியசாலை சத்திர சிகிச்சைக் கூட தாதி ஒருவருக்கு கொரோனா – ஊழியர்கள் 7 பேர் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்