கிளிநொச்சி வைத்தியசாலை சத்திர சிகிச்சைக் கூட தாதி ஒருவருக்கு கொரோனா – ஊழியர்கள் 7 பேர் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கிளிநொச்சி வைத்தியசாலை சத்திர சிகிச்சைக் கூட தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த தாதி முச்சக்கரவண்டியில் பயணித்தது தொடர்பில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரும், அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

திருகோணமலை பகுதியில் உள்ள தாதியின் குடும்பத்தினருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யபபட்டுள்ளது.

குறித்த தாதியின் மாதிரிகள் நேற்று மீண்டும் கோரப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த வைரஸ் பரவும் அபாயமற்றது எனவும், தாதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை எனவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாதியுடன் நெருங்கி பழகிய 7 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களிற்கான சத்திர சிகிச்சை தவிர்ந்து ஏனைய திகதியிடப்பட்ட சத்திர சிகிச்சைகள் 30ம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

Previous articleரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதி காதலி சமப்வஇடத்திலே பலி ,காதலன் கவலைக்கிடம்!
Next articleகாற்றில் பரவும் புதிய வைரஸ் என்பது ஒரு பொய்க் கதை – ரவி குமுதேஷ் பகீர் தகவல்