இந்தியாவில் கொரோனா கோரதாண்டவம் – வாய் வழியாக கணவருக்கு சுவாசம் கொடுத்த மனைவி

இந்தியாவில் கொரோனா கோரதாண்டவம் ஆடிவரும் நிலையில் வெளிநாடுகள் பலவும் இந்தியாவுக்கு கைகொடுக்க முன் வந்துள்ளன. எனினும் அங்கு கொரோனாவால் தினமும் எஆராளமானோர் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

அரசாங்கம் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளபோதும் கொரோனாவின் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு சுவாச பிரச்சினையால் மருத்துவமனை சென்றபோது , மருத்துவமனைகள் நிரம்பி வழிவதனால் எந்த மருத்துவமனையில் இடமும் இல்லை என்பதுடன் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் கணவனின் உயிரைக் காக்க அதிகபட்சம் வாய் வழியாக சுவாசத்தை தானே மனைவி செலுத்தி கொண்டே இருந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இதேவேளை நம் நாட்டிலும் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா எனும் கொடிய அரக்கனில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

Previous articleகாற்றில் பரவும் புதிய வைரஸ் என்பது ஒரு பொய்க் கதை – ரவி குமுதேஷ் பகீர் தகவல்
Next articleஅண்ணணை பொல்லால் அடித்து கொன்ற தம்பி – மினுவாங்கொடையில் பயங்கரம்