அண்ணணை பொல்லால் அடித்து கொன்ற தம்பி – மினுவாங்கொடையில் பயங்கரம்

மினுவாங்கொடையில் இளைய சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்டு மூத்த சகோதரன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

இந்த சம்பவம் நேற்றையதினம் மினுவாங்கொடை – வட்டினாபஹா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 27 வயதுடைய இளைய சகோதரனால் 32 வயதுடைய மூத்த சகோதரன் பொல்லால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை புத்தாண்டுக்கு முன்னரும் , புத்தாண்டின் பின்னரும் இவ்வாறு குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் கவலைக்குரியதென்றும், எனவே இவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்

Previous articleஇந்தியாவில் கொரோனா கோரதாண்டவம் – வாய் வழியாக கணவருக்கு சுவாசம் கொடுத்த மனைவி
Next articleநாட்டில் உடனடியாக முடக்கப்படும் சில பகுதிகள்!