களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்திலுள்ள சில பிரதேசதங்கள் இன்ற இரவு 8 மணி முதல் முடக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளளது.
குறித்த பகுதிகளில் தீவிரமடையும் கோவிட் தொற்றின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி களுத்துறை மாடவட்டத்தின் மிரிஸ்வத்த, பெலென்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று இரவு 8 மணிமுதல் முடக்கப்படுகின்றன.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் பொல்ஹேன, ஹிரலுகெதர, களு அக்கல, அஸ்வென்னவத்த கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இவ்வாறு முடக்கப்படுகின்றன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஆகியன மறு அறிவித்தலை் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.