யாழில் பாதுகாப்பு கடமைக்குச் சென்ற இளைஞனைக் கடந்த 23 ம் திகதியிலிருந்து காணணவில்லை!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசிக்கும் நாதன் ஜெசிந்தன் (வயது 20) என்பவரை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் காவலாளியாக கடமைபுரிந்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த 2021.04.23 அன்று இரவு நேரக் கடமைக்கு சென்றுள்ள நிலையில் அவர் இன்னமும் திரும்பி வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது

Previous articleகாதல் தோலியால் யாழ் நாவற்குழிப் பாலத்திலிருந்து குதிக்க முற்பட்ட யுவதி!
Next articleஅனுராதபுரம் ஆய்வு கூடம் செயலிழப்பு 3200 பீ.சி.ஆர் சோதனை அறிக்கைகள் சிக்கலில்!