அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலுள்ள ஆய்வுகூடத்தில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறு காரணமாக பரிசோதனை நடவடிக்கைகள் பெருமளவில் தேங்கியுள்ளன.
ஆய்வு கூட செயற்பாடுகள் செயலிழந்துள்ளதால் அநுராதபுர மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற 3200 இற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனை மாதிரிகளின் அறிக்கைகளை வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.