மொனராகலை மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அம்மாவட்டத்தின் சியம்பலாண்டுவ, புத்தல மற்றும் மொனராகலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட 15 பாடசாலைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மொனராகலை மாவட்டத்தில் கொவிட் அபாய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள புத்தல கல்வி வலயத்திலுள்ள 4 பாடசாலைகளும், சியம்பலாண்டு கல்வி வலயத்துக்கு உட்பட்ட 6 பாடசாலைகளும், மொனராகலை கல்வி வலயத்துக்குட்பட்ட 5 பாடசாலைகளுமே இவ்வாறு மூடப்படவுள்ளன.