இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 94 பேர் கொரோனாவிற்கு பலி!

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 15,684 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,97,672 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 15,684 பேர்களில் 4,250 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 94 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 13,651 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Ads by

மேலும் தமிழகத்தில் இன்று 13,625 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 976,876 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று115,642
பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 217,63,365 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Previous articleதமிழகத்தில் வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
Next articleநோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறிகள் என்ன தெரியுமா?