தங்கையை காதலித்து திருமணம் செய்ததற்காக முன்விரோதத்தில் என்ஜினியர் குத்திக் கொலை!

தங்கையை காதலித்து திருமணம் செய்ததற்காக முன்விரோதத்தில், என்ஜினியர் குத்திக் கொலை செய்யப்பட்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

திருச்சியின் லால்குடி அருகே திருமங்கலத்தை சேர்ந்தவர் கிருபன்ராஜ், சென்னையில் பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி ராபின் ஷாமேரி, இவர்களுக்கு ஆண் குழந்தையொன்றும் உள்ளது.

கிருபன்ராஜின் தங்கையான கிரிஜாவை, அவரது நண்பனான கவியரசன் காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக கிரிஜாவுக்கு வேறொரு மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயமானது.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய கிரிஜா, கவியரசனை திருமணம் செய்து கொண்டார், இது கிருபன்ராசுக்கு பிடிக்காததால் கவியரசனுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே சம்பவ தினத்தன்று கிருபன்ராஜ், கவியரசனின் வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார், அங்கு அவரை கவியரசனும், அவருடைய 2 சகோதரர்களும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருபன்ராஜை, கவியரசன் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்தனர்.

Previous articleயாழ். வடமராட்சிக்குள் புகுந்தது சீனா – சிறுவர் பூங்காவில் பெயர்ப்பலகை
Next articleமேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!