மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் ஆகியன ஏப்ரல் 30 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் வழக்கம் போல் செயற்படும் என்றும், முடிவுகளில் ஏதோனும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் திறந்திருக்கும் பாடசாலைகள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.

இதேவேளை குறித்த பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Previous articleதங்கையை காதலித்து திருமணம் செய்ததற்காக முன்விரோதத்தில் என்ஜினியர் குத்திக் கொலை!
Next articleவவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு