வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதனை முன்னிட்டு வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையம், வியாபார நிலையங்கள், வங்கிகளின் தன்னியக்க இயந்திரங்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்பாட்டினை சுகாதார பிரிவினர், வவுனியா நகரசபை மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தனர்.

மேலும் நகரசபையின் தீயணைப்பு வாகனங்களின் ஊடாக பொது இடங்கள் நீர்பாய்ச்சி தூய்மையாக்கப்பட்டதுடன் மருந்துகள் விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு!
Next articleவவுனியாவிலிருந்து தம்புள்ளை சென்றுவந்த மொத்த வியாபாரிகளுக்கு பிசீஆர் பரிசோதனை!