வவுனியாவிலிருந்து தம்புள்ளை சென்றுவந்த மொத்த வியாபாரிகளுக்கு பிசீஆர் பரிசோதனை!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டத்தையடுத்து அங்கு சென்று வந்த வவுனியாவைச் சேர்ந்த 112 மரக்கறி மொத்த வியாபாரிகளுக்கு இன்று (26.04) காலை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனாவின் மூன்றாம் அலை தொற்றையடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள், பழங்கள் என்பவற்றை கொண்டு செல்பவர்கள் மற்றும் தம்புள்ளையில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு வவுனியாவில் உள்ள மரக்கறி மொத்த நிலையத்தில் சுகாதார துறையினரால் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

112 பேருக்கு இவ்வாறு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு
Next articleஇன்று இதுவரையில் 952 பேருக்கு கொரோனா!