யாழ் பாலாவியில் இளம் குடும்பஸ்த்தர் மீது மண்வெட்டி கொத்து – மணல் கள்ளர்கள் அட்டூழியம்

யாழ்.கொடிகாமம் – பாலாவி பகுதியில் வயல் காணியில் மணல் அகழ்ந்தவர்களை தட்டிக்கேட்ட காணி உரிமையாளர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, பாலாவி பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் மணல் கடத்தல் கும்பல் ஒன்று உழவு இயந்திரங்களுடன் புகுந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காணி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு சென்று

தனது காணி என சுட்டிக்காட்டியதுடன் மணல் அகழ்வை நிறுத்தும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து காணி உரிமையாளரின் வீட்டுக்கு சென்ற மணல் கடத்தல்காரர்கள் காணி உரிமையாளரை மண்வெட்டியால் அடித்து விட்டு தப்பி சென்றிருக்கின்றனர்.

சம்பவத்தில் கெற்பேலி – மிருசுவிலை சேர்ந்த பொ.நிமலன்(வயது30) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இதே பகுதியில் கடந்தவாரம் மணல் கடத்தல்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்று இதுவரையில் 952 பேருக்கு கொரோனா!
Next articleயாழில் காதலித்த இளம் ஜோடி தலைமறைவு – காதலியின் தாயையும் சகோதரணையும் கடத்திய காதலனின் தந்தை