யாழில் காதலித்த இளம் ஜோடி தலைமறைவு – காதலியின் தாயையும் சகோதரணையும் கடத்திய காதலனின் தந்தை

வடமராட்சி நெல்லியடியில் காதலித்த இளம் ஜோடி தலைமறைவு ; தாயும் மகனும் கடத்தல் !
வடமராட்சி கரணவாய் பகுதியில் காதல் விவகாரமொன்றில் தாயும் மகனும் கடத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது கரணவாய் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 14 வயதான சிறுவனும் , தாயாருமே கடத்தப்பட்டுள்ளனர்

கடந்த 25 ம் திகதி கடந்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது தகவலறிந்த நெல்லியடி பொலிசார் விரைந்து செயற்பட்டு இன்றைய தினமே அதே பகுதி வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்டனர் சிறுவனின் சகோதரியும் அவரது காதலனும் எங்கே என கேட்டு சிறுவன் தாக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்திருந்தது

நேற்று அதிகாலை 1-30 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாயாரை நெல்லியடி நகரத்தில் இறக்கி விட்டு கடத்தல்காரரர்கள் தம்பிச் சென்றுள்ளனர் கடந்தப்பட்ட பெண்ணின் மகள் ஒருவரை காதலித்திருந்த நிலையில் இருவரும் அண்மையில் தலைமறைவாகினர் அவர்களின் இருப்பிடத்தை கேட்டே தாயும் மகனும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

காதலர்கள் இருவரும் சாதி மாறி திருமணம் செய்திருந்த நிலையில் காதலனின் பெற்றோர் அவர்களை பிரிப்பதற்கு தீவிர முயற்சி செய்து வருகின்றனர் இந்த கடதலின் சூத்திரதாரியென காதலனின் தந்தை நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Previous articleயாழ் பாலாவியில் இளம் குடும்பஸ்த்தர் மீது மண்வெட்டி கொத்து – மணல் கள்ளர்கள் அட்டூழியம்
Next articleஇலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!